மன்னாருக்கு படையெடுக்கும் வெளிநாட்டுப்பறவைகள்.
இலங்கையின் மன்னார் மாவட்டத்திற்கு அதிகளவான வெளிநாட்டுப்பறவைகள் இடம்பெயர்ந்துள்ளமை அங்குள்ள மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாக நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் சுற்றுலா துறையானது மிகவும் நலிவடைந்துள்ளது.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மன்னார் மாவட்டத்திற்கு அதிகளவான வெளிநாட்டு பறவைகள் இடம்பெயர்ந்துள்ளன.
பிளமிங்கோக்கள் என கூறப்படும் பூநாரை பறவையினங்களை மன்னார் மாவட்டத்தில் அதிகம் அவதானிக்க முடிவதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்தப் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் நீண்ட தூரம் பயணித்து மன்னாருக்கு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பறவைகளை பார்ப்பதற்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் என உள்ளூர் சுற்றுலா பயணிகள் மாத்திரம் இல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.