புட்டின் தலைமையிலான ரஷ்யா இலங்கைக்கு பதிலடி
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த Aeroflot விமானத்தை இலங்கை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதற்கு ரஷ்யா நேற்று (ஜன. 03) தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
மொஸ்கோவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை நேற்று (03) ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு , அவரிடம் ரஷ்ய அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு, “இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளும் மோசமாகப் பாதிக்கப்படுவதற்கு முன்னர், இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்க்குமாறு இலங்கையை வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய விமானங்கள் இலங்கைக்கு வரும்போது எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்கப்பட மாட்டாது என்றும் எழுத்து மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்கிடையில், ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் இலங்கைக்கான வணிக விமானங்களை நிறுத்தியுள்ளது.