காலிமுகத்திடல் தாக்குதல்: மேலும் 45 பேர் மாட்டினர்!
மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைப் பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 2 ஆயிரத்து 393 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.