கச்சதீவை மீட்க வேண்டும் இந்திய மத்திய அரசு இரகசிய நடவடிக்கை?
‘கச்சத்தீவை மீட்க வேண்டும்’ என, இந்த தீவை தாரை வார்க்க உதவிய தி.மு.க., மத்திய அரசை வற்புறுத்தி வருகிறது. மோடி, கச்சத்தீவை மீட்டு கொடுப்பார் என பா.ஜ.,வினர் சபதம் எடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு ரகசியமாக பல விஷயங்களை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து இலங்கை ஜனாதிபதியிடமும் பேசிஉள்ளாராம்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் சமீபத்தில் இலங்கைக்கு ரகசியமாக வந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ஜனாதிபதியுடன் கச்சத்தீவு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
‘கச்சத்தீவு எப்படி இந்தியாவிற்கு மீண்டும் கிடைக்கும், அதற்கு என்ன வழி முறைகள்?’ என, பல விஷயங்களை இருவரும் பேசியுள்ளனராம்.
தற்போதுள்ள சூழலில், 99 ஆண்டுகளுக்கு கச்சத்தீவை இந்தியா குத்தகைக்கு எடுக்கலாம்; அதற்கு இந்திய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை பாராளுமன்றத்திலும் இதை ஆமோதிக்க வேண்டும். இது தான் வழிமுறை என சொல்லப்படுகிறது.
இதற்கான வேலைகளில் இந்திய மத்திய அரசு இறங்கியுள்ளதாம். அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன் கச்சத்தீவு இந்தியாவிற்கு கிடைத்துவிடும் என்கின்றனராம், பா.ஜ., மூத்த தலைவர்கள்.