பிரதமர் பதவியை விட்டு விலகுவேன் – ரணில் : விலகலாம் – கோட்டா
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தினேஷ் வீரக்கொடியை நியமிக்குமாறும் பிரதமர் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதாகவும், இல்லையெனில் பொருளாதாரம் தொடர்பான முக்கிய தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரதமரின் பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவும், எக்காரணம் கொண்டும் நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்க மாட்டார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளில் இருந்து தான் விலகுவதாக பிரதமர் தெரிவித்துள்ளதாகவும், அப்படியானால், அவ்வாறு செய்யுமாறு ஜனாதிபதி தம்மிடம் கூறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.