பிரம்மாண்டமாக உருவாகும் ’ஜென்டில்மேன் 2′

1993-ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்’. இயக்குநர் சங்கரின் முதல் படமான இப்படத்தில் கவுண்டமணி, மதுபாலா, மனோரம்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.
கே.டி. குஞ்சுமோன் பல வெற்றிப் படங்களை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்தவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ சார்பாக ‘ஜென்டில்மேன் 2′ படத்தை தயாரிக்கவுள்ளார். நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்க கீரவாணி இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் ’ஜென்டில்மேன் 2′ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி ’ஜென்டில்மேன் 2’ படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்குவார் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோகுல் கிருஷ்ணா, நாணி நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான ‘ஆஹா கல்யாணம்’ படத்தை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது ’ஜென்டில்மேன் 2′ படத்தை இயக்கவுள்ளார்.