ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க இராஜினாமா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீரதுங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், ஜனாதிபதி அந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், தனது பங்களிப்பு இனி தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.