உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.

இலங்கை பாக்கிஸ்தான் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவை, வை. டப்லியூ.எம். ஏ. மற்றும் கொழும்பு டைம்ஸ் சமூக ஊடக வலையமைப்பு ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் இலங்கை பாக்கிஸ்தான் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் வைபவம் கொழும்பு தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள வை. எம். எம். ஏ. பேரவையின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
சஹீட். எம். ரிஸ்மி, ரசூல்டீன், பவாஸா தஹா ஆகியோர்களது இணைத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாக்கிஸ்தான் நாட்டு உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் உமர் பாருக் புர்க்கி கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இதில் கொழும்பு நகரில்அமைந்துள்ள வறிய கடும்பத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
(இக்பால் அலி)