ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு

சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் எடுத்துள்ளதால், வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல, திருநெல்வேலியில் உள்ள 2 ஆர்த்தி ஸ்கேன் சென்டரிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இரண்டு வாகனங்களில் வந்த 6 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள ஆர்த்தி நிறுவனங்களின் உரிமையாளர் கோவிந்தராஜன் வீட்டில் அவரது மனைவி மருத்துவர் கோமதியிடம் வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.