ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லை ?

நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.