நாடு முழுவதும் ஆயுதப் படைகளை இறக்க ஜனாதிபதி உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதப் படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாற்பதாவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12 வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி இந்த ஆணை வெளியிடப்பட்டது.
இதன்படி ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (07) பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.