பசில் ராஜபக்ச எம்.பி பதவியை ராஜினாமா?
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
இது தொடர்பில் அவர் நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில் இருந்து விலகியதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா பதவியேற்க உள்ளார்.
தம்மிக்க பெரேரா பாராளுமன்றத்திற்கு வந்ததன் பின்னர் அவர் பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
தம்மிக்க பெரேராவும் அண்மையில் பாராளுமன்றத்தில் பிரவேசித்து சக்திவாய்ந்த அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்வதாக சூசகமாக தெரிவித்திருந்தார்.