ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பிடியாணை பிறப்பித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் உள்ள போராட்ட கிராமங்களை தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன, சந்தேக நபர் அவர் தங்கியிருந்த வீட்டிடை விட்டு மறைந்து வாழ்வதாகவும், அவரைக் கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறும் நீதிமன்றில் கோரினார்.
இதன்படி, முறைப்பாட்டாளர் முன்வைத்த கோரிக்கையை ஏற்பதாகக் கூறிய நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.