ராஜபக்ச குடும்பத்துக்கு கறுப்புப் புள்ளியாக ’09’.
ராஜபக்ச குடும்பத்துக்குப் பொருந்தாத நாளாக 09ஆம் திகதி மாறியுள்ளது என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ’09’ ஆம் திகதி ராஜபக்சக்களுக்கு வலி தந்த நாளாகவும், மறக்க முடியாத நாளாகவும் அமைந்துள்ளது எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
மே – 09 ஆம் திகதி, பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச விலகினார். மஹிந்தவின் 52 வருடகால அரசியலில் அந்நாள் அவருக்குப் பெரும் கறுப்புப் புள்ளியாக அமைந்தது.
ஜுன் 09 ஆம் திகதி பஸில் ராஜபக்ச, தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை இராஜிநாமா செய்தார். 21ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறினால் ஆபத்து என்பதை அறிந்த அவர், முன்கூட்டியே விடைபெற்றார்.
எனவே, ஜுலை 09 ஆம் திகதி என்ன நடக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவாரா என சமூகவலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.