அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் கீதாஜீவன்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தங்களை என் அழைக்கவில்லை என அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வாக்குவாதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் அரசு பள்ளிகளில் பயில்வது குறித்தும் அதிக மாணவ,மாணவிகளை சேர்க்கும் விதமாகவும், தூத்துக்குடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் ஆதவா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் அரசு பள்ளிகளில் மாணவ சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி முன்னிலையில் நடைபெற்று நிகழ்ச்சியில், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு, திடீர் விசிட் அடித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இந்நிகழ்ச்சிக்கு ஏன் எங்களை அழைக்கவில்லை? உள்ளூர் சட்டமன்ற உறுப்பினராக நான் இருக்கிறேன் என தெரியாதா என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தமிழகத்தில் பல பகுதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அங்கே மாவட்ட ஆட்சியரை கூட அழைக்கவில்லை தூத்துக்குடியில் மட்டும் தான் ஆட்சியரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறோம் என கூறினார்.
மேலும், மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், மாநகராட்சி பள்ளியில் முழுமையாக மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளது. அப்படி இருப்பின் எவ்வாறு இப்பள்ளியில் நிகழ்ச்சி நடத்தலாம்? இப்பள்ளியில் எதற்கு விழுப்புணர்வு நிகழ்ச்சி? எப்படி நிகழ்ச்சி நடத்தலாம் என காரசாரமாக கேள்வியேழுப்பினார். இது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் புகார் கொடுப்பதாகவும், அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.