பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் கவலைக்கிடம்.
பாகிஸ்தானில் 2001 முதல் 2008 வரை ஜனாதிபதியாக இருந்த பர்வேஷ் முஷாரப் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் 2001 முதல் 2008 வரை ஜனாதிபதியாக இருந்தவர் பர்வேஷ் முஷாரப், 79.
இவர் கடந்த, 2007ல், ஜனாதிபதியாக இருந்தபோது, பாகிஸ்தானில் அவரச நிலையை அமுல்படுத்தினார். இது தொடர்பாக, அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய் நகருக்கு சென்ற அவர், 2016ல் இருந்து, அங்கேயே வசித்து வருகிறார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முஷாரப், துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் இதனை மறுத்த பாகிஸ்தான் ஊடகங்கள், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவதாக செய்தி வெளியிட்டுள்ளன.