45 எம்.பிக்கள் படுகொலை! 66 வருடங்களில் என்கிறார் டலஸ்.

இலங்கையில் கடந்த 66 வருடங்களில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
1956 முதல் 2022 வரையான காலப்பகுதியிலேயே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன என்று நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் தகவல் வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரதமராக இருந்த எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் கொலையே முதலாவது படுகொலையாகும். இறுதியாக அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்டார்.
ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த ஒருவரும் எமது நாட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.
அதாவது 19 மாதங்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன” – என்றார்.