எழுதுபொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்.
பயிற்சிக் கொப்பிகள், பாடசாலைப் பைகள், காலணிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.
நாட்டில் காகிதத் தட்டுப்பாடு நிலவி வருவதால், பயிற்சிக் கொப்பிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பல வகையான பயிற்சிக் கொப்பிகளின் மாவட்ட பிரதிநிதிகள் தங்களிடம் பயிற்சிக் கொப்பிகள் விற்பனைக்கு இல்லை என்றும், புதிதாக முன்பதிவு செய்யப்பட்டும் இன்னும் அவை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
50 ரூபாவாக இருந்த 80 பக்க கொப்பியின் விலை தற்போது 110 ரூபாவாகவும், 70 ரூபாவாக இருந்த 120 பக்க கொப்பியின் விலை 130 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.
இந்தப் பயிற்சிக் கொப்பிகளின் விலை கொப்பிகளின் வகையைப் பொறுத்து மாறுபடும். மேலும் சில கொப்பிகளின் விலை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று பாடசாலை எழுதுபொருள் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை ரூ.3 முதல் 5 ரூபா வரை இருந்த நகல் பெறுவதற்கான கட்டணம் தற்போது ரூ.12 முதல் 15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.