பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும்.
பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு முன்னாள் சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்ன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றால் முகக்கவசம் அணிவதற்கான கட்டாயத் தேவையை நீக்குவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எடுத்த தீர்மானத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாததன் மூலம் தனிநபர் ஒருவர் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டால், மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அந்த நபர் மிகவும் பாதிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.