அதிகாலை விபத்தில் குடும்பஸ்தர் மரணம்!

வெல்லவாய – தணமல்வில வீதியில் யாலபோவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனமல்வில நோக்கிப் பயணித்த சைக்கிள் வலப்பக்க குறுக்கு வீதிக்கு திரும்ப முற்பட்டபோது, எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சைக்கிளில் பயணித்த கலமொடஆர பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான நபரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் வெல்லவாய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.