தம்மிக்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு முன் அமைச்சராகிறார்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அவர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் அவர் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.