சரணடையுங்கள் அல்லது…உக்ரைனியர்களுக்கு வேறு வழியில்லை: ரஷ்ய ஆதரவு தலைவர் எச்சரிக்கை!
உக்ரைன் ரஷ்யா போரின் தற்போதைய மையப்பகுதியாக திகழும் செவரோடோனெட்ஸ்க் நகரத்தை பிற உக்ரைனிய நகரங்களுடன் இணைக்கும் மூன்று பாலங்களையும் ரஷ்ய படையினர் தகர்த்தெறிந்து விட்டதாக பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது தற்போது தெற்குப் பகுதி நகரான செவரோடோனெட்ஸ்க்கில் உச்சக்கட்டத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்ய ராணுவம் நகரை முழுவதுமாக கைப்பற்றவில்லை என்றாலும், பிராந்தியத்தின் மையப்பகுதியை உக்ரைனின் பிற பகுதிகளுடன் இணைக்கும் மூன்று பாலங்களை ரஷ்ய ராணுவம் இப்போது அழித்துள்ளது.
இதுத் தொடர்பாக அந்த பிராந்தியத்தின் அளுநர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ள கருத்தில், நகரின் மூன்று பாலங்களையும் அழித்து இருப்பதன் மூலம், பொதுமக்களின் வெளியேற்றத்தையும், அத்தியாவசிய பொருள்கள் நகரின் உள்ளே கொண்டு செல்வதையும் ரஷ்ய ராணுவம் சாத்தியமற்றதாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.