நான்கு மணி நேரத்தில் 24 முட்டையிட்ட கோழி:
எமது அண்டை நாடான இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் ஒரே அதிசயம் நடந்துள்ளது.. இதை பற்றிதான் ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கிறதாம்.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் பிஜுகுமார்… இவர் கோழி வியாபாரம் செய்து வருகிறார்.
இதற்காகவே, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கி, 20க்கும் மேற்பட்ட கோழிகளை வாங்கி வளர்த்து வருகிறார்… அதில் ஒரு கோழியை பிஜுவுக்கு ரொம்ப பிடித்துப்போய்விட்டது.
அந்த கோழிக்கு சின்னு என்று பெயர் வைத்தார்.. மற்ற கோழிகளைவிட, சின்னுவை கொஞ்சம் விசேடமாகவே கவனித்து வந்துள்ளார்..
இந்த நிலையில் சின்னு கோழி, ஒரு அதிசய சம்பவத்தை நடத்தியுள்ளது.. திடீரென நேற்று, அது தன்னுடைய காலை சற்று தூக்கி தூக்கி நடந்து கொண்டிருந்ததாம்.. இதை பார்த்ததும், பிஜு அதிர்ந்து போனார்.. ஒருவேளை காலில் அதற்கு ஏதாவது அடிபட்டிருக்கலாம் என்று நினைத்து, சின்னுவின் காலில் தைலத்தை எடுத்து தடவி உள்ளார்..
ஆனால், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அதாவது காலை 8.30 மணி இருக்கும்.. அப்போது சின்னு, ஒரு முட்டை போட்டது…
பிறகு மறுபடியும் கொஞ்ச நேரத்திலேயே அடுத்தடுத்து சில முட்டைகளை போட்டது.. நேரம் ஆக ஆக சின்னு, முட்டை போட்டுக் கொண்டே இருந்தது.. இந்த விஷயம் அந்த பகுதி முழுக்க பரவிவிட்டது.. தகவலறிந்து ஏராளமானோர் சின்னுவை பார்க்க திரண்டு வந்துவிட்டனர்.. அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே, சின்னு முட்டை போடுவதை நிறுத்தவே இல்லை.. தொடர்ந்து போட்டுக் கொண்டேருந்தது.
காலை சுமார் 8.30 மணிக்கு முட்டை போடத்தொடங்கிய சின்னு, மதியம் 2.30 மணி வரை முட்டை போட்டுக் கொண்டிருந்தது.. அதற்கு பிறகுதான் முட்டை போடுவதை நிறுத்தியது… இந்த 6 மணி நேரத்திற்குள் மொத்தம் 24 முட்டைகளை போட்டது… இந்த தகவல் மறுபடியும் அந்த பகுதியில் வேகமாக பரவியது.. மேலும் பலர் திரண்டு வந்தனர்.. பிஜுகுமாருக்கு குஷியோ குஷி.. அவர் வீட்டு முன்பு ஏராளமானோர் கூடிவிட்டனராம்.
இதுகுறித்து திருச்சூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வினோத் சொல்லும்போது,
ஒரு கோழி 6 மணிநேரத்தில் 24 முட்டைகளை போடுவது என்பது மிகவும் அதிசயமான சம்பவமாகும்… இதுக்கு என்ன காரணம் என்று உடனடியாக தெரியவில்லை.. இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த பிறகே என்ன காரணம் என்பது குறித்து சொல்ல முடியும் என்றார்.
இந்த சம்பவம் ஆலப்புழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.