தமிழக முதலமைச்சருக்கு வடக்கு மீனவர்கள் கடிதம்.

இராமேஸ்வரம் இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் கோரிக்கைக் கடிதம் ஒன்றைக் கையளிக்க வடக்கு கடற்றொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா இதனைத் தெரிவித்துள்ளார்.