எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மறுசீரமைப்புக்கான தேசிய இயக்கத்தின் ஒன்றுகூடல்!

மறுசீரமைப்புக்கான தேசிய இயக்கத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (15) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடியது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சாத்தியமான நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள முடியுமான நிலைப்பாடுகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக அரசமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மிகவும் ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தமது அர்ப்பணிப்பை அனைத்துத் தரப்பினரும் இதன்போது வலியுறுத்தினர்.