பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை கல்வி அமைச்சு அறிவிப்பு.

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.