நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ஜெயிலர்.

ரஜினிகாந்தின் 169-ஆவது படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தற்போது இந்த படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஜெயிலர் என்று படத்தின் பெயருடன் போஸ்டரை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது.