சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை படமெடுத்து அனுப்பினால் பரிசு
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை இருக்கும் நாடு இந்தியா. இவ்வளவு கோடி மக்கள் வாழ, இருப்பிடங்களும் அதிகரித்து வருகின்றன. நகரமயமாதலால் ஒரே இடத்தில மக்கள் குவியும் போது குடியிருப்புகள் அதிகரிக்கிறது. குறைந்த இடத்தில் நிறைய பேர் வாழ வேண்டும் என்றால் இருக்கும் இடங்களில் எல்லாம் கட்டிடங்களைக் கட்டி விடுகின்றனர். சாலையின் எல்லை வரை வீடே அமைந்துவிடுகிறது. இந்திய மக்கள்தொகைக்கு ஏற்ப வாகனப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. வீட்டிற்கு 1 வண்டி என்ற நிலை மாறி, ஆளுக்கு ஒரு வண்டி என்ற நிலையில் போகிறது. பெரும்பாலான குடியிருப்புகளில் வண்டி நிறுத்த இடம் இருப்பதில்லை. இதனால் சாலையில் வாகனங்களை நிறுத்தும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.
இந்தப் பழக்கத்தால் சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்களே நிறைந்து விடுகிறது. சாலையில் மற்ற வாகனங்கள் போக இடம் இருப்பதில்லை. இது சாலைபோக்குவதை பெரிதும் பாதிக்கிறது. நெரிசலான சாலையாக மாறி விடுகிறது.
இது குறித்து, நேற்று டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இந்த சாலைபோக்குவரத்துப் பிரச்னையைத் தீர்க்க ஒரு சட்டம் கொண்டுவர இருப்பதாகக் கூறினார்.
அந்த சட்டத்தின்படி சாலையை மறித்து, தவறாக நிறுத்தப்பட்டிருக்கும் வண்டிகளை படமெடுத்து அனுப்பினால் உடனே அந்த வண்டியை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். படம் எடுத்து அனுப்புபவர்களுக்கு சன்மானமாக 500 ரூபாய் கொடுக்கப்படும். இந்த திட்டத்தை விரைவில் கொண்டு வர இருபத்தாக அமைச்சர் கூறினார்.
இதனால் சாலை குறுக்கே வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க முடியும். சாலை போக்குவரத்தும் சீராக, இடையூறுகள் இன்றி செயல்படும். மக்கள் தங்கள் வண்டிகளை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வழிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.