வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸ் 265 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுபயணம் செய்து 2 டெஸ்ட் ,3 டி20,3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது .
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 103 ரன்களுக்கு 10 விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் ,ஜேடன் சில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது இதனால் 265 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது வெஸ்ட் இண்டீஸ் .அந்த அணியில் கேப்டன் கிரேக் பிராத்வைட் அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வங்காளதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய வங்காளதேச அணி 2ம் நாள்ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது .மஹ்முதுல் ஹசன் ஜாய்,18 ரன்களிலும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 8 ரன்களிலும் களத்தில் உள்ளனர் .