வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, ரட்டா, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 9 பேரை கைது செய்யுமாறு உத்தரவு!
கடந்த ஜுன் மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்றை கைது செய்து ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர, ரத்திந்து சேனாரத்ன (ரட்டா), ஜகத் மனுவர்ண, தம்மிக்க முனசிங்க , ரத்கரவ்வே ஜினரதன தேரர், எரங்க குணசேகர, ஜெஹான் அப்புஹாமி மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் சந்தேகநபர்களின் பட்டியலில் அடங்குவர்.
கடந்த 9 ஆம் திகதி கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளிலும் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாகவும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 9 ஆம் திகதி கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதிகளிலும் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு 10 ஆம் திகதி இசுருபாயவிற்கு முன்பாக வன்முறைச் சேதங்களை ஏற்படுத்தியதாகவும் , அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் , கோட்டை மற்றும் தலங்கம பொலிஸ் நிலையங்கள் , கட்டுவளை மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களுக்கு அறிவித்துள்ளன.
போராட்டத்தின் போது அவர்கள் கலவரத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல், குற்றவியல் நிர்ப்பந்தம், காயங்களை ஏற்படுத்துதல், இடையூறு செய்தல், குறும்பு செய்தல் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்தல் மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக உறுப்பினர்களாக இருந்து கொண்டு குற்றங்களைச் செய்தமை போன்ற பல குற்றங்களைச் செய்துள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது.