தெற்கின் எரிபொருள் போராட்டம் ,வடக்கிலும் தொடர்கிறது! வவுனியாவில் வீதி மூடப்பட்டது (Video)

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள பாதை தடைப்பட்டுள்ளது.
எரிபொருள் கோரி வவுனியாவில் மக்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் காரணமாக இது இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.30 மணிமுதல் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் போக்குவரத்து பௌசர் ஒன்று யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வழியில் , அதை செல்லவிடாது போராட்டக்காரர்கள் வீதியை மறித்ததாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் இராணுவத்தினர் வந்து ஒரு நபருக்கு 500 ரூபா எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுத்ததையடுத்து நிலைமை சீரடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.