அவுஸ்திரேலிய அணியை பந்தாடிய இலங்கை அணி.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணிக்காக டிராவிஸ் ஹெட் 65 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் எடுத்தார். அணித்தலைவர் ஆரோன் பின்ச் (62), அலெக்ஸ் கேரி (49), கிளென் மேக்ஸ்வெல் (18 பந்துகளில் 33) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்து வீச்சில் ஜெப்ரி வான்டசே 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர, துனித் வெல்லலகே மற்றும் தனஞ்சய சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
292 என்ற வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணியின் முன்னணி வீரரான பாத்தும் நிஸ்ஸங்க 147 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகளுடன் 137 ஓட்டங்களைப் பெற்றார். குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களைப் பெற்றார். நிரோஷன் டிக்வெல்ல 25 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
குசல் மெண்டிஸ் காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறும் போது 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 137 ரன்களில் ஜே ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் பதும் நிஸ்ஸங்க ஆட்டமிழந்தார். பின்னர் தனஞ்சய சில்வா 25 ஓட்டங்களைப் பெற்றதோடு சரித் அசலங்கா ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களைப் பெற்று இலங்கையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஜாய் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளையும், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-1 என முன்னிலை பெற, முக்கியமான இன்னிங்ஸில் 137 ஓட்டங்களைப் பெற்று, போட்டியின் ஆட்டநாயகனாக பதம் நிஸ்ஸங்க தெரிவானார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.