பிரகதி மைதான சுரங்கப் பாதை: குப்பையை அகற்றிய பிரதமர் மோடி

பிரகதி மைதான சுரங்கப் பாதையை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதில் நடந்து சென்று ஆய்வு செய்தார். சுரங்கப் பாதையின் ஓரத்தில், தண்ணீர் பாட்டில் கிடந்தது. பிரதமர் கீழே குனிந்து அந்த பாட்டிலை எடுத்தார். ஆங்காங்கே சில குப்பைகளும் கிடந்தன. அவற்றையும் கையில் அள்ளினார். பின்னர் அனைத்து குப்பைகளையும் அவரே குப்பைத் தொட்டியில் போட்டார்.
தூய்மை இந்தியா திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரே தூய்மைப் பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் டெல்லி விழாவில் அவர் குப்பைகளை அகற்றியது பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது. பிரதமர் குப்பைகளை அள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.