யாழ். மாநகர மேயருடன் கனேடியத் தூதுதர் பேச்சு.

யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணனைக் கனேடிய நாட்டுத் தூதுவர் இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணம் மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது அரசியல், பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.