வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 66-வது படத்தின் பெயர் வெளியீடு.

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என சீனியர் நடிகர்கள் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. நாளை விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி தற்போது படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. “வாரிசு” என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ள பெயர் அறிவிப்பில் நடிகர் விஜய் கோர்ட்-சூட் அணிந்து அமர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.