தெற்கு உக்ரைன் பகுதியை விட்டுக்கொடுக்க மாட்டோம் – ஜெலன்ஸ்கி உறுதி.
போர் நடவடிக்கைகளை ரஷியா இந்த வாரம் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதாகவும், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தனது ஆயுதப் படைகளை மேலும் பலப்படுத்தும் என்று அதிபர் விளாடிமிர் புதின் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் , “இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, எங்கள் ஆயுதப் படைகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வலுப்படுத்துவோம். புதிதாகப் பரிசோதிக்கப்பட்ட எங்களின் சர்மட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. இந்த ஆண்டு இறுதிக்குள் அவை பணியில் ஈடுபடுத்தப்படும் ” என தெரிவித்துள்ளார்.