விஜேதாசவின் 21ல் ஜனாதிபதிக்கு பாதகமான சரத்துகள் உதிர்ந்த பின் அமைச்சரவை அங்கீகாரம்
ஜனாதிபதிக்கு பல நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை அமைச்சரவை நேற்று நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் முதலில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தில் உள்ள பல சரத்துக்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாராளுமன்றத்தை கலைத்தல், அமைச்சுக்களை ஜனாதிபதி வசம் வைத்தல், பிரதமரை பதவி நீக்கம் செய்தல், அமைச்சுக்களை கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இதில் சுயாதீன ஆணைக்குழுக்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.