யாழ். கோட்டைக்கு அருகில் சடலம் மீட்பு.

யாழ்ப்பாணம், கோட்டை முனீஸ்வரன் கோயிலுக்குப் பின் பகுதியிலுள்ள அகழியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுகின்றது என இன்று யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.