வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொடூரப் படுகொலை!

வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்., காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் இடம்பெற்றுள்ளது.
மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்குச் சென்ற உறவினர் ஒருவர் மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
78 வயதுடைய சாணை தவமணி என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.