எரிபொருள் தட்டுப்பாட்டால் யாழில் குதிரை வண்டியில் பயணிக்கும் அருட்தந்தை!
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டால் குதிரை வண்டியில் தனது பயணத்தை அருட்தந்தையர் ஒருவர் மேற்கொண்டு வருகின்றார்.
நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த அருட்தந்தை தனக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதன் காரணமாக குதிரை வண்டியில் தனது வழமையான போக்குவரத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவித்தார்.