தாமதமாகும் எரிபொருள் கப்பல்.

நாடு முழுவதும் நீண்ட எண்ணெய் வரிசைகள் உள்ளன. இலங்கைக்கு வரவிருந்த டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இரண்டும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இலங்கைக்கு வரவிருந்த கப்பல் ஒரு நாள் தாமதமாகும் எனவும் அதன் பிரகாரம் அது இன்று வரும் எனவும் எரிசக்தி அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதிக்கு முன்னர் இலங்கைக்கு வரவிருந்த டீசல் கப்பலும் இம்மாதம் 28ஆம் திகதி வரை தாமதமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது எரிபொருளுக்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.