நீதி அமைச்சர் யாழ். விஜயம்.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ்.இராமச்சந்திரனின் அழைப்பையேற்று இந்து பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கலந்துகொள்கின்றார்.
மேலும் சில தினங்களுக்கு அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.