கைதான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு என்ன நடந்தது?

கொழும்பு, கோட்டை, தலங்கம பிரதேசங்களில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிணை வழங்கியுள்ளது.
நடிகர்களான ஜகத் மனுவர்ண, ஜெஹான் அப்புஹாமி, தம்மிக்க முனசிங்க மற்றும் எரங்க குணசேகர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரத்தா எனப்படும் ரத்திந்து சேனாரத்ன, வண.ரத்கரவ்வே ஜினரதன தேரர் மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோர் எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.