பல மைல்கள் தூரம் பெற்றோல் – டீசல் வரிசையில் நிற்கும் மருத்துவர்கள்! அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்! நோயாளிகள் பாதிப்பு!
இன்று கொழும்பு வைத்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகே நீண்ட வரிசையில் வைத்தியர்கள் எரிபொருளுக்காக காத்து நிற்கிறார்கள்.
சில மருத்துவர்கள் நேற்றிரவு முதல் , வரிசையிலும், சில மருத்துவர்கள் இன்று காலை முதலும் வரிசையில் நிற்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக கொழும்பு வைத்தியசாலைகளில் இன்று பயன்படுத்தப்படும் பல சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேநேரம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியும் காணப்பட்டது.
மேலும் எரிபொருள் நெருக்கடி காரணமாக மூன்று வைத்தியசாலைகள் நேற்று (23) மூடப்பட்டன.
கல்நேவ பிராந்திய வைத்தியசாலை, நெகம்பஹா பிராந்திய வைத்தியசாலை, கலாவெவ பிராந்திய வைத்தியசாலை மற்றும் கல்னேவ பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்க எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.