தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்பு.

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் நேற்று மாலை அவர் பதவியேற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, அவ்வெற்றிடத்துக்கு கடந்த 22 ஆம் திகதி சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் மூலம் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.