நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம்

இந்தியாவில் நபர் ஒருவர் வயில் இருந்து கிருஷ்ணர் சிலை வெளியில் எடுக்கப்பட்ட சம்பவத்தின் தலைசுற்ற வைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலஹாவியில் உள்ள ஒரு தனியார் மருத்துவனைக்கு தொண்டை வலியுடன் எதையும் விழுங்க முடியவில்லை, மூச்சுவிட முடியவில்லை என்கிற உடல் உபாதைகளுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்றார்.

அவரைச் பரிசோதித்த மருத்துவர்கள் தொண்டையில் உலோக பொருள் ஒன்று சிக்கியிருப்பதை ‘Endoscopy’ மூலம் கண்டறிந்தனர். அந்த உலோக பொருள்தான் கிருஷ்ணர் சிலை.

கிருஷ்ணர் சிலையை அவர் ஏன் விழுங்கினார் என்பதைக் கேட்ட போது அவரது பழக்கம் ஓன்று தெரிய வந்திருக்கிறது. அதாவது காலை நேரத்தில் புனித நீரை குடிக்கும் பழக்கத்தை அவர் கொண்டிருந்தார்.

அப்போது அந்த பாத்திரத்தில் கிருஷ்ணர் சிலையை போட்டு வைத்திருக்கிறார். அந்த நீரை குடிக்கும் போது சிலை உள்ளே சென்றுள்ளது.

பின்னர் அறுவை சிகிச்சையை மிகக் கவனமாகச் செய்த மருத்துவர்கள் வெற்றிகரமாகச் சிலையை வெளியே எடுத்துள்ளனர். கிருஷ்ணரின் கால், உணவு குழாய்க்குள் நீட்டிக் கொண்டு இருந்ததை அகற்றுவதுதான் சவாலான ஒன்றாக இருந்தததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம்

 

Leave A Reply

Your email address will not be published.