ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு தீ! ஈஸ்டர் தாக்குதல் ரகசியத்தை வெளியிட்ட உளவாளி!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள், கொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய முக்கியமான தகவல்களை , தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவாளி ஒருவர் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் பாரதூரமான தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலும் வெளிநாட்டிலும் உள்ள பல முக்கிய இராஜதந்திர தூதரகங்களுக்கு தகவல் அளித்தவர் தம்மிடம் உள்ள தகவல்களின் சுருக்கமான விவரங்களை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளார்.
பின்னர் அவர் சமீபத்தில் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார்.
TMVP உளவாளியான குறிப்பிட்ட நபர் , ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அதிகாரிகளைச் சந்தித்து TMVP தொடர்பான குற்றங்கள் தொடர்பான தகவல்களையும் , ஐநா அதிகாரிகள் முன்னிலையில் சுமார் 5 நாட்களாக வாக்குமூலமாக பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகள் மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பிலும் இந்த உளவாளி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிஎம்விபியால் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடந்த கொலைகள் பற்றிய விவரங்களையும் உளவாளி வெளிப்படுத்தியுள்ளதாக மேலும் சொல்லப்படுகிறது.