கடனாக எரிபொருள் இல்லை.. உறுதியளித்தவற்றை விரைவுபடுத்துங்கள் : இந்தியா

இலங்கைக்கு அதிக எரிபொருள் கடனை வழங்குவதற்கு பதிலாக இந்தியாவுடன் இணக்கம் காணப்பட்ட திட்டங்களை துரிதப்படுத்துமாறு இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய தூதுக்குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள மன்னார் காற்றாலை மின் நிலையம், கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம், சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையம், திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாக அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றை இந்தியாவுக்கு கொடுப்பதை துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது.
எரிபொருளுக்கு மேலும் கடன் வழங்குவதற்கு இந்திய தரப்பிலிருந்து சாதகமான பதில் வரவில்லை என்று சண்டே டைம்ஸ் மேலும்தெரிவித்துள்ளது.