கிழக்கு உக்ரைனில் 2-வது நகரத்தை துண்டிக்க ரஷியா முயற்சி.
கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதற்கு ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. அங்கு சீவீரோடொனெட்ஸ் நகரில் இருந்து உக்ரைன் படைகள் பின்வாங்குகின்றன. அங்குள்ள கட்டிடங்களை ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியும், குண்டு வீசியும் ரஷிய படைகள் தரை மட்டமாக்கி உள்ளன.
10 லட்சம் பேர் வசித்த நகரில் இப்போது 10 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். இங்குள்ள அஜோட் ரசாயன ஆலையில் உக்ரைன் படையின் ஒரு பிரிவினர், உள்ளூர்வாசிகள் 500 பேருடன் உள்ளனர். இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் லிசிசான்ஸ்க் நகரை தெற்கில் இருந்து துண்டிக்க ரஷிய படைகள் முயற்சித்து வருகின்றன. இதை லுஹான்ஸ்க் கவர்னர் செர்கிய் ஹைடாய் ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.