யாழில் சிறுமியைத் துஷ்பிரயோகப்படுத்திய குடும்பஸ்தர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
சம்பவத்தையடுத்து சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.
சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் அவரது தந்தையின் நண்பரான அயல் வீட்டைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இளவாலைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபர் நேற்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதையடுத்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.